அதிரைக்கு ரமலானில் தடையின்றி மின்சாரம் வழங்க அதிரை பிறை வழங்கிய கோரிக்கை மனு!

Editorial
1
இஸ்லாமிய பெருமக்களின் புனித மாதமான ரமலான் மாதம் இன்னும் சில தினங்களில் வர உள்ளது. இம்மாதம் 18-6-2015 (வெள்ளிக் கிழமை) முதல் துவங்கி அடுத்த மாதம் 18-7-2015 (சனிக்கிழமை) வரை மக்கள் நோன்பு நோற்பார்கள்.

அதிராம்பட்டினத்தில் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். கிட்டத்தட்ட அதிகாலை 4 மணி முதல் மாலை 6.30 மணி வரை உண்ணாமல், தண்ணீர் அருந்தாமல் நோன்பு நோற்பார்கள். மேலும் இரவு நேரங்களில் மார்க்கம் சார்ந்த கிரியைகளை நிறைவேற்றுவர். மேலும் அனைத்து விதமான காரியங்களுக்கும் மின்சாரம் மிகவும் அவசியமானது.

எனவே கடந்த ஆண்டுகளில் இம்மாதத்தில் முழு நேர மின் விநியோகம் வழங்கியதுபொல்  இந்த ஆண்டும் பொதுமக்களின் நலன் கருதி ரமலான் மாதம் முழுவதும் அதற்க்கு அடுத்த நாளான நோன்புப் பெருநாள் அன்றும் மின்சாரம் தடை இன்றி விநியோகம் செய்யுமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இது குறித்த நமது அதிரை பிறை செய்தியாளர்கள் இன்று காலை அதிரை உதவி மின் பொறியாளர் அவர்களை சந்தித்து இந்த கோரிக்கை மனுவினை வழங்கினர். இதனை படித்து பார்த்த நிர்வாகி ரமலான் மாதம் தடையின்றி மின்சாரம் வழங்க தங்களால் இயன்ற அளவுக்கு முயற்சி செய்வதாக உறுதியளித்தார்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. உண்மையை மறைக்க நினைக்கும் நபர்கள் பட்டியலில் அதிரை நியூஸ் நிர்வாகிகளுக்கு முதலிடமும் அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகிகளுக்கு இரண்டாமிடமும் கொடுக்க வேண்டும். உண்மையை உறக்க சொல்ல வேண்டிய நீங்கள் இதுகுறித்து பேசாமல் இருப்பது வெட்ககேடு....

    ReplyDelete
Post a Comment