பட்டுக்கோட்டை நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் குணா என்கிற குணசேகர்(வயது 30). இவர் அங்குள்ள கொண்டிகுளம் பகுதியில் வாட்டர் சர்வீஸ் நிலையம் நடத்தி வந்தார்.
நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் இவர் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
வடசேரி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வந்தபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்தது. திடீரென அந்த கும்பல தாங்கள் வைத்திருந்த அரிவாளால் குணசேகரை சரமாரியாக வெட்டியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பட்டுக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து குணசேகர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நேரு நகரை சேர்ந்த பைசல், ஏ.கே.குமார் ஆகியோர் தலைமையிலான கும்பல் குணசேகரை வெட்டி கொன்றது தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள ஏ.கே.குமார் பட்டுக்கோட்டை நகர காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்து வருகிறார். பைசலும் காங்கிரஸ் கட்சியில் உள்ளார். பட்டுக்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக கொலை சம்பவம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நன்றி . மாலைமலர்
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது