இன்று 18/6/2014 காலை காட்டுமன்னார்குடி அருகில் ரம்ஜான் தைக்கால் என்ற பகுதியில் மாற்றுமத பெண் உடல் நலகுறைவால் இறந்துவிட்டார். அவரை அடக்கம் செய்ய அவரது உறவினர்களோ அல்லது அந்த பெண்ணின் மதத்தை சேர்ந்தவர்கலோ அடக்கம் செய்ய தயாராக இல்லை. இந்த தகவல் தமுமுகவிற்கு வந்தது உடனே ரம்ஜான் தைக்காலை சேர்ந்த குன்டுபா என்ற யூனுஸ் மாவட்ட நிர்வாகியிடம் சொன்னார் இதற்கு யாருடைய அனுமதியும் தேவை இல்லை உடனே கலத்தில் இறங்குங்கள் என்று சொல்லபட்டது. லால்பேட்டையில் இருந்து தமுமுக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ரம்ஜான் தைக்கால் தமுமுக சகோதரர்கள் களத்திற்கு சென்றனர். முஸ்லிம் பெண்கள் சிலர் நமக்கு உதவியாக அந்த பெண்ணிற்கு செய்யவேண்டியவைகலை செய்துகொடுத்தார்கள். எல்லாவேலைகளும் முடிந்தவுடன் தமுமுக ஆம்புலன்சில் எடுத்துகொன்டு மாயானத்தில் அடக்கம் செய்தார்கள்.
சகோதரர்களின் சேவைக்கு மறுமையில் யா அல்லாஹ் நற்கூலிகளை கொடுப்பாயக...
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது