அல்லாஹுவின் மகத்தான உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் மற்றும் லத்திஃபா மருத்துவமனை இனைந்து நடத்திய ”மாபெரும் இரத்ததான முகாம்” 29.08.2014 அன்று மண்டல தலைவர் சகோ.முஹம்மது அலி தலைமையிலும், முகாம் பொறுப்பாளர் மண்டல செயலாளர் சகோ.அஷ்ரப் அலி அவர்களின் முன்னிலையிலும் நடைப்பெற்றது.
அல்லாஹுவின் உதவியால் இரத்ததானத்தில் தொடர்ந்து தமிழகத்தில் 9 வருடங்களாக முதலிடம் பெற்று வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வளைகுடா நாடுகளிலும் இரத்தானத்தில் சாதனை படைத்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!
காலை 8.00 மணிக்கு இரத்ததான முகாம் ஆரம்பம் செய்யப்பட்டது. விண்ணப்ப படிவங்களை தொண்டரயினர் சுறுசுறுப்பாக புர்த்தி செய்து கொடுத்து கொண்டுயிருந்தனர்.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வைத்துக்கொண்டு நெடு வரிசையாக சகோதரர்கள் நிற்றுகொண்டு இரத்ததானம் செய்ய காத்துயிருந்தன்ர். நேரம் செல்லச்செல்ல சகோதரர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
இம்முறையும் கூட்டத்தை சாமளிக்க மருத்துவமனை நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தது.
200-க்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு 199 சகோதரர்கள் குருதி கொடையளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!
இதில் இந்து, கிருத்துவ சகோதரர்களும் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தது தனி சிறப்பு.
மண்டல தாவா செயலாளர் சகோ.ஷாப அத் தலைமையில் தொண்டரணியினர் சிறப்பான முறையில் கள பணியாற்றினர்.
இதில் தேய்ரா, சோனாப்பூர், அல்கூஸ், ஜபல் அலி, சத்வா, ஹோர் அல் அன்ஸ், பர்துபை, காராமா, கிஸஸ் ஆகிய பகுதியிலிருந்து சகோதரர்கள் ஏராளாமான சகோதரர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.
எல்லாம் புகழும் நம்மை படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே!
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது