
இந்நிலையில் இராஜாமடம் பள்ளி அருகே குடி போதையில்
தாறுமாராக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இளைஞர்களின் வாகனத்தின் மீது அதிரையர்கள் வந்துகொண்டிருந்த ஆம்னி வேண் மோதாமல் இருக்க வேணின் ஓட்டுனர் வேகமாக வண்டியை திருப்பியுள்ளார்.
இதனால் நிலைத்தடுமாறிய வாகனம் தலைகுப்பற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண்கள் உட்பட அதிரையை சேர்ந்த ஏழு பேர் காயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்தவர்களை முதற்க்கட்டமாக அதிரை டாக்டர் மீராசா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று முதலுதவி அளிக்கப்பட்டது.
மேலும் மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது முதற்க்கட்ட தகவலின் மூலம் தெரிய வருகிறது.
விபத்து நடந்த பகுதியில் இருக்கும் மதுக்கடையை அகற்றவேண்டும்
ReplyDelete