இன்று இறந்த உடலை எடுத்து செல்ல அதிரை பைத்துல்மால் ஆம்புலன்ஸ் வரவில்லை என்ற ஒரு பதிவை முன்பு பதிந்திருந்தோம். இந்த தகவல் சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களிடம் விசாரித்து பதிந்தோம். ஆனால் பிறகு அதிரை பைத்துல்மால் சென்று நாம் விசாரித்ததில் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் இது குறித்து விளக்கம் அளித்ததில் பேயரில் இந்த பதிவு சற்று மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளது என்பது அறிந்து நாம் வருந்துகிறோம். மேலும் மிகைப்படுத்தப் பட்ட இந்த பதிவின் தலைப்பையும் நாம் மாற்றியுள்ளோம்.
மேலும் இந்த பதிவு யாரையும் புண்படுத்துவதற்க்காக பதியப்பட்டது அல்ல.
மேலும் இந்த பதிவு யாரையும் புண்படுத்துவதற்க்காக பதியப்பட்டது அல்ல.
அதிரை பிறை நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்..
ReplyDeleteஎல்லோரும் எல்லாமும் செய்துவிட முடியாது தம்பிகளா..
பத்திரிக்கை,ஊடகத் துறைக்கு வந்த தாங்கள் ரொம்ப பொறுமையாக இருக்க வேண்டும். தாங்கள் அவசரப்பட்டு செய்தியை தலைப்பு வைத்து பதிவு செய்கின்றீர்கள்,அதன் தலைப்பை வாசித்த நான் முடிவு தெரியாமல் இருக்கின்றேன்..
நல்லபடி செய்தியை பரப்புங்கள்., முடிந்தால் அதிரை நியூஸ் , அதிரை எக்ஸ்பிரஸ் , நிர்வாகிக இயக்குனர்களிடம் தொடர்பு வைத்து பரிமாற்றம் வைத்து கொள்ளுங்கள்..