
இசையே கோவில்… இன்ஸ்ட்ரூமென்டுகளே
தெய்வம்…! எல்லா இசையமைப்பாளர்களுக்கும் இதுதான் கடவுளின் ஃபார்முலா
என்றாலும், அதையும் தாண்டி அவர்களை இயக்குவது ஏதோ ஒன்று. அதைதான்
அவர்கள் வெவ்வேறு வடிவங்களில் கும்பிட்டு கொண்டிருக்கிறார்கள். அல்லது வணங்கிக்
கொண்டிருக்கிறார்கள். அல்லது தொழுது கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களை
சரணாகதியடைய வைக்கிற அந்த சக்தியை விட அதற்கான நெருக்கடிதான் மிக மிக
முக்கியமானது. இந்த நெருக்கடிக்கு ஆன்மீகவாதிகளும் பக்தர்களும் ‘மன அமைதி’ என்று பெயர்
வைத்திருக்கிறார்கள். யுவனும் அப்படியே.
மன அமைதியை தேடிய யுவனுக்கு
அந்த இஸ்லாமே சிறந்த அமைதியை கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள் பெயர் சொல்ல
விரும்பாத சில திரையுலக நண்பர்கள்.
அன்பான
அம்மா இருந்தார்கள் யுவனுக்கு . எந்த நேரத்தில் அவர் வந்தாலும் பாசத்தோடு
அரவணைத்துக் கொள்கிற அளவுக்கு ராஜாவின் இல்லம் இருந்தது.
அதற்கும்
கொடுத்து வைக்கவில்லை யுவனுக்கு. அம்மாவின் மரணம் அவர் எதிர்பாரதது. முற்றிலும்
உடைந்து போன யுவன் பெரும்பாலும் வீட்டுக்கு வருதை தவிர்த்து ரெக்கார்டிங்
தியேட்டரிலேயே கிடந்தார். உடன் பிறந்த சொந்தங்களால் கூட அவருக்கு அமைதியில்லை
என்று கூறப்படுகிறது. நடுவில் சில நாட்கள் அவர் உறங்கவே இல்லையாம். இரவில் உறக்கம்
வராமல் தவிப்பவர்களுக்குதான் அந்த வேதனை தெரியும். அதை நான்கைந்து நாட்கள்
தொடர்ச்சியாக அனுபவித்தாராம் அவர். மனமே அமைதி கொள்… என்று
விரும்பி விரும்பி கேட்டாலும், சட்டென
கேட்டுவிடுமா அது?
இவரது
வேதனையை அருகிலிருந்து கவனித்த நண்பர் ஒருவர், இஸ்லாமியர்களின்
வேத புத்தகமான குர் ஆன் புத்தகத்தை கொடுத்து ‘இதை
படி. மனம் அமைதியடையும்’ என்றாராம்.
உறக்கம் வராத ஒரு ஐந்தாவது நாளில் அந்த புத்தகத்தை விரித்தார் யுவன். மனம்
விரட்டிக் கொண்டேயிருந்தது அவரை. மெல்ல அதை கயிற்றுக்குள் கட்டி இறுக்கினார்
யுவன். ஏதோ ஒரு கட்டத்தில் அப்படியே மனம் உடைந்து அந்த புத்தகத்தின் மீது முகத்தை
வைத்து அழ ஆரம்பித்தாராம்…. அதற்கப்புறம்
அவர் எப்போது உறங்கினார் என்பது தெரியவில்லை. மீண்டும் அவர் எழுந்தபோது மனம்
முற்றிலும் சாந்தமாகியிருந்ததாம். அவர் தேடிய நிம்மதி அன்றுதான் கிடைத்தது
அவருக்கு.
இதற்கப்புறம்
அவர் தீவிரமாக அந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தாராம். இப்போது தினமும் ஐந்து
வேளை தொழுகிற அளவுக்கு அவர் இஸ்லாம் மார்க்கத்தால் ஈர்க்கப்பட்டிருப்பதாக
கூறுகிறார்கள். விரைவில் அதிகாரபூர்வமாக தன்னை அந்த மதத்தில் இணைத்துக் கொள்ளும்
முடிவில் இருக்கிறாராம் யுவன். அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம்.
யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக
கூறுகிறார்கள்.
info:facebook.com

இது உண்மையாக இருந்தால் எல்லாப்புகழும் இறைவனுகே
ReplyDeleteDear adirai pirai please remove this post
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் அதிரை பிரை நிர்வாகத்திற்கு இந்த பதிவை நீக்குவதோடு பிறருக்கு பகிர்வதையும் தவிர்க்கவும்
உண்மையில் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறுவதை ஒவ்வொரு இஸ்லாமியனும் விரும்புகிறான். சந்தோஷப் படுகிறான். ஆனால் இதுபோன்ற விசயங்களை பொதுவில் பகிர்வதால் அவருக்கு நெருக்கடி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பொதுவாக சினிமாக்காரர்கள் அவர்களின் மன (மத) மாற்றத்தை முக்கியமாக இஸ்லாத்தை தழுவுவதை பொதுவில் பகிர்ந்துகொள்ள விரும்பமாட்டார்கள். பலர் இன்னும் தன் பெயரை வெளியிடாமல் உள்ளனர்.
முகநூலில் வரும் தகவல்கள் எல்லாம் உண்மையும் அல்ல அதேநேரம் பொய்யும் அல்ல.
இன்ஷா அல்லாஹ் யுவன் முஸ்லிமாக மாற பிரார்த்திப்போம். அதை விடுத்து இதனை பிறருக்கு பகிர்வதால் எந்த பயனும் இல்லை எனவே நீக்கம் செய்யவும். மேலும் யாரிடமும் பகிர வேண்டாம் எனவும் பிறருக்கு தெரியப்படுத்தவும்
நம் மக்களுக்கு உண்மையில் முதிர்ச்சி குறைவு... பிறர் ரகசியமாக தாவா செய்துகொண்டு இருக்க நாம் மட்டும்தான் ஊருக்கு தம்பட்டம் அடிப்போம்.