அதிரையில் முழுவீச்சில் நடைபெறும் C.M.P LANE வாய்க்கால் துப்பரவு செய்யும் பணி

0

அதிரையில் முக்கிய நன்னீர் வடிகாளாகவும் அதிரை செக்கடிக் குளம், ஆலடி குளம், மண்ணப்பண் குளம் ஆகிய குளங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாகவும் இருந்து வருவது அதிரை சி.எம்.பி லேன் வாய்க்கால் ஆகும். இந்த வாய்க்காலால்  தான் அதிரையில் உள்ள பல முக்கிய குளங்கள் நிரம்பி வழியும். அப்படிப்பட்ட இந்த வாய்க்காள் செயல் இழந்து புதர் மண்டி நீர் செல்லும் பாதை இல்லாமல் பல வருடங்கள் தூர்வாரப்படாமல் கிடந்தது.

இதனால் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நமதூரின் குளங்கள் நிரம்பாமல் சிறுவர்களின் விளையாட்டுத் திடலாக மட்டுமே இருந்து வந்தது.

இன்னிலையில் தமிழக அரசின் "நமக்கு நாமே திட்டம்" என்னும் ஒரு திட்டத்தின் மூலம் அரசின் சார்பாக பணியின் செலவில் மூண்றில் இரண்டு பங்குகளும் அப்பகுதி மக்களின் சார்பாக மூண்றில் ஒரு பங்கும் பணம் செலவளிக்கப்பட்டு கடந்த நான்கு நாட்களாக இந்த வாய்க்களை தூர்வாரப்பட்டு இனி அந்த வாய்க்காளில் புதர் ஏதும் முளைக்காத வண்ணம் வாய்காளின் இரு பக்கங்களிலும் சுவர்  எழுப்பும் பணி மும்முரமாக நடைப்பெற்று வருகிறது. 

இந்த வேலை முடிந்த சில தினங்களில் தண்ணீர் இந்த வாய்க்காள் வழியாக குளங்களுக்கு விப்படும் என்று இந்த பணியை மேற்க்கொள்ளும் கான்ட்ராக்டர் கூறியுள்ளார்.









Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)