இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும்
ரூபாய் நோட்டுகளில் ‘வாட்டர் மார்க்‘ என அழைக்கப்படும் பகுதியும், அதில் மகாத்மா
காந்தியின் புகைப்படமும், அந்த ரூபாயின் மதிப்பை குறிக்கும் எண்ணும் (அதாவது 100, 1000 என) உள்ளது. அந்த இடத்தில் வங்கிகள், அரசு, தனியார் நிறுவனங்களால் ‘பின்‘
அடிக்கப்படுகிறது. இதனால் நாளடைவில் அந்த ஓட்டை பெரிதாகி விடுகிறது. இது
மட்டுமல்லாது இளைஞர்கள் சிலர்‘ ஆர்ட்டின் படம்‘
வரைகின்றனர். ஒருவர் பெயரை எழுதி கவிதைகள், காதல் வசனங்கள் கூட எழுதுகின்றனர்.
இந்திய ரிசர்வர் வங்கி வெளியிடும் ரூபாய் நோட்டில் இந்த வாசகங்கள் இடம் பெறுவது பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கிறது. ‘வாட்டர் மார்க்‘ பகுதி மாசடைவதால் அந்த ரூபாய் நோட்டுகளை உண்மை தன்மையை கண்டுபிடிப்பதிலும் சிக்கல் எழுகிறது. இதற்கு முடிவு கட்டும் வகையில் வாடிக்கையாளர்கள் வங்கிகளில் அளிக்கும் ரூபாய் நோட்டுகளில் எழுத்துக்கள், எண்கள், பின் அடித்த ஓட்டைகள் இருந்தால் அந்த நோட்டுகளை வங்கிகள் மீண¢டும் புழக்கத்திற்கு அனுமதிக்கக் கூடாது.
இந்த உத்தரவு 2014 ஜன.1ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் என ரிசர்வ் வங்கி கூறியதாக தகவல்கள் வெளியானது.
நேற்று விடுமுறை நாள் என்பதால் இன்று தான் வங்கிகள் திறக்கப்படும். எனவே, இன்று முதல் கிறுக்கல் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும்போது அவை மீண்டும் புழக்கத்திற்கு அனுமதிக்கப்படாது என்று தெரிகிறது.

பீதியடைய தேவையில்லை: ஆர்பிஐ விளக்கம்:-
ReplyDeleteரூபாய் நோட்டுகளில் பேனா மற்றும் பென்சிலால் கிறுக்கப்பட்டிருந்தால் அவை வாங்கப்பட மாட்டாது என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரூபாய் நோட்டுகளின் வெள்ளை பகுதியில் எண்ணோ அல்லது கையெழுத்து போன்ற கிறுக்கலோ அல்லது வாசகமோ இடம்பெற்றிருந்தால் அது செல்லாது என்றும், 2014 ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு இந்த நோட்டுகள் வங்கிகளில் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்ற தகவல் பரவி வருகிறது.
இத்தகவல் வெறும் வதந்தி என்றும் இதனால் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது. இத்தகைய ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும் என்றும், மக்கள் வழக்கம்போல இவற்றை வாங்கலாம், கொடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
பேனாவால் கிறுக்கப்பட்ட வாசகம் இடம்பெற்றுள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று எத்தகைய சுற்றறிக்கையையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளது.