அதிரையில் சில தெருக்களில் கடந்த பல நாட்களாக மின் கம்பங்கள் பழுதடைந்தும் விளக்குகள் சரி வர எரியாமலும் இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அதிரை சேர்மன் வாடி பேருந்து நிறுத்ததில் கடந்த வருடம் நடைப்பெற்ற ஒரு சாலை விபத்தால் ஒரு வருடமாக இன்னும் சரி செய்யப்படாமல் சாய்ந்த வண்ணம் ஒரு
மின் கம்பம் உள்ளது. முக்கிய பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இது போன்ற ஒரு இடத்தில் உள்ள பிரச்சனையை கண்டுகொள்ளாமல் அதிரை மின்சார வாரியத்தினர் அலட்சியம் செலுத்தி வருகின்றனர். இந்த செய்தியை அதிரை பிறையிலும் புகைப்படத்துடன் பதிந்திருந்தோம். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
இது போன்று அதிரை நடுத்தெரு கீழ்புறத்தில் நன்றாக எறிந்து கொண்டிருக்கும் மின் விளக்கு ஒன்று கம்பத்தை விட்டு விலகி நின்று மின்சார வயரின் பிடிமானத்தில் உள்ளது. சிறுவர்கள் அதிகம் விளையாடிக் கொண்டிருக்கும் இந்த பகுதியில் இந்த மின் விளக்கு மேல் ஒரு குருவி அமர்ந்தால் கூட அது கீழே விழுந்து விடும் அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது.
அது போல் அதிரை மரைக்காயர் பள்ளி அருகில் உள்ள மின் கம்பம், அதிரை மேட்டுத் தெருவில் உள்ள மின் கம்பம், ஆஸ்பத்திரி தெருவில் உள்ள மின் கம்பம், செட்டித் தெருவில் உள்ள மின் கம்பம் பல நாட்களாக எரியாததால் அப்பகுதி வழியாக இரவு நெரங்களில் செல்பவர்கள் இருட்டில் அவதிப்படுகின்றனர். மேலும் அண்மையில் நடந்த ஒரு வழிப்பறி போன்ற குற்றங்கள் அதிகம் நடக்க வாய்ப்புள்ளது.
எனவே அதிரை மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி இந்த பகுதிகளில் அதிரை மின்சார வாரியத்தினர் துரித நடவடிக்கை எடுக்குமாறு அதிரை பிறை.இன் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.






இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நமதூர் EB யில் உள்ளவர்கள் எந்த இலட்சணத்தில் வேலை செய்கிறார்கள் என்று. நிறுவாகமே சரி இல்லாத போது, அதில் வேலை செய்பவன் மட்டும் எப்படி இருப்பான். வெலைங்கிடும் அதிராம்பட்டினம்.
ReplyDeleteAmma
ReplyDelete