கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக இன்று தொழுகைக்கு நேரம் ஒதுக்கப்பட்ட அதிசயம்..!

Editorial
6





கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் ஆசிய கோப்பை தொடர் போட்டி வங்கதேசத்தில் நடைப்பெற்று வருகிறது.  மார்ச் 01ஆம் தேதியான இன்று ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின.

இந்த போட்டி விறுவிறுப்பாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் வேலையில் அனைவரும் ஆச்சரியப்படக்கூடிய வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

போட்டிக்கு இடையில் மக்ரிப் தொழுகைக்கான நேரம் குறுக்கிட்டது. இதனால் அஃப்கானிஸ்தான் வீரர்கள் போட்டிக்கு இடையில் நடுவரிடம் மக்ரிப் தொழுகை தொழுவதற்க்கு தங்களுக்கு 5 நிமிடம் இடைவேளை அளிக்குமாறு அனுமதி கேட்டனர். 

நடுவர்கள் அனைவரிடமும் அனுமதி பெற்று அஃப்கானிஸ்தான் வீரர்கள் தொழுவதற்க்கு 5 நிமிடம் இடைவேளை வழங்கினர். உடனை வீரர்கள் மைதானத்திலேயே ஜமாத் வைத்து மக்ரிப் தொழுகையை நிறைவேற்றினர். இந்நிகழ்வு அனைத்து ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்தது.


கிரிக்கெட் வரலாற்றில் போட்டிக்கு இடையில் தொழுகைக்கு நேரம் ஒதுக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும். மேலும் இன்றைய போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியினர் அபார வெற்றி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது






இம்முறையை துவக்கி வைத்த ஆஃப்கானிஸ்தான் அணியினருக்கு அல்லாஹ் பல வெற்றிகளை வழங்கி உலகின் முன்னனி அணிகளில் ஒன்றாக ஆக்குவானாக.

Post a Comment

6Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment