கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் ஆசிய கோப்பை தொடர் போட்டி வங்கதேசத்தில் நடைப்பெற்று வருகிறது. மார்ச் 01ஆம் தேதியான இன்று ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின.
இந்த போட்டி விறுவிறுப்பாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் வேலையில் அனைவரும் ஆச்சரியப்படக்கூடிய வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
போட்டிக்கு இடையில் மக்ரிப் தொழுகைக்கான நேரம் குறுக்கிட்டது. இதனால் அஃப்கானிஸ்தான் வீரர்கள் போட்டிக்கு இடையில் நடுவரிடம் மக்ரிப் தொழுகை தொழுவதற்க்கு தங்களுக்கு 5 நிமிடம் இடைவேளை அளிக்குமாறு அனுமதி கேட்டனர்.
நடுவர்கள் அனைவரிடமும் அனுமதி பெற்று அஃப்கானிஸ்தான் வீரர்கள் தொழுவதற்க்கு 5 நிமிடம் இடைவேளை வழங்கினர். உடனை வீரர்கள் மைதானத்திலேயே ஜமாத் வைத்து மக்ரிப் தொழுகையை நிறைவேற்றினர். இந்நிகழ்வு அனைத்து ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்தது.
கிரிக்கெட் வரலாற்றில் போட்டிக்கு இடையில் தொழுகைக்கு நேரம் ஒதுக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும். மேலும் இன்றைய போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியினர் அபார வெற்றி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இம்முறையை துவக்கி வைத்த ஆஃப்கானிஸ்தான் அணியினருக்கு அல்லாஹ் பல வெற்றிகளை வழங்கி உலகின் முன்னனி அணிகளில் ஒன்றாக ஆக்குவானாக.



Aameen
ReplyDeleteமாஷா அல்லாஹ் :)
ReplyDeleteAmeen
ReplyDeleteaameen...
ReplyDeleteMashaallah
ReplyDeleteameen
ReplyDelete